" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
விருதுநகர் மாவட்டம், சாலைமறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தவக்கண்ணன் (23) இவர் நேற்று காலை பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் காவல் நிலையம் சென்று விட்டு, அங்கிருந்து திருப்புவனம் சென்று விட்டு ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மாமா சென்றுள்ளார்.
இந்நிலையில் அ.முக்குளம் காவல் நிலைய SI மணிகண்டன் தனது வாக்கி டாக்கியை காணவில்லை என்று கூறி அதனை தவக் கண்ணன் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் வைத்து வாக்கி டாக்கியை எடுத்தது தான் தான் என ஒத்துக் கொள்ளுமாறு தவக் கண்ணனை SI மணிகண்டன் மற்றும் காவலர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஆனால் தவக் கண்ணன் வாக்கி டாக்கியை தான் எடுக்கவில்லை என்று அழுது கூறியுள்ளார் ஆனால் அவரது பேச்சை நம்பாத காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்
இதில் பலத்த காயமடைந்த தவக் கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரனைக்கு என்று அழைத்துச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய முக்குளம் காவல் நிலைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்