" alt="" aria-hidden="true" />
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனதலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அரசை வலியுறுத்தி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலக மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்நிற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை கொரோனா தொற்றாள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இதில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சையால் குணமடைந்து அடைந்து வீடு திரும்பியுள்ளனர் . கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் இந்த இத்தருணத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இதுநாள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருசில தனியார் மருத்துவமனைகளுக்கும் தற்போது மத்திய அரசு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வந்தாலும்கூட கட்டணம் என்பது மிக அதிகப்படியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்பவர்களின் மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்